Tuesday, May 4, 2010

நான்கு : பகவத் கீதை.


பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் காரணம், விளைவு என்ற அடிப்படையில் விளக்கப்படுகின்றன. எல்லா நிகழ்வுகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. கர்மா என்பது செயலுக்கு தூண்டுதலாக அமைகிறது.அதுவே சுமையாகவும் அமைகிறது. ஆகவே சுமையை குறைக்க விரும்புபவர்கள் மேற்கொண்டு கர்மாவை ஏற்ப்படுதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயல்களின் விளைவுகள் அடுத்தக் சுற்று கர்மாவாக சேர்ந்து விடுகின்றன.
செயல்களின் விளைவுகள் கர்மாவாக செயல்பட முடியாதவாறு அமைய வேண்டுமென்றால், பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மன நிலையுடன் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் செயலில் ஈடுபட வேண்டும். செயல்களின் பயன்களை துறந்து விடுதல் தியாகம்; பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களையே துறந்து விடுதல் சந்நியாசம் என்று விளக்கப்பட்டு, கர்மத்தளையிளிருந்து விடுபடும் மார்க்கத்தை பகவத் கீதை அறிவுறுத்துகிறது. கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
௧, சஞ்சித கர்மம், ஒட்டு மொத்தமாக முற்பிறப்பில் ஏற்ப்பட்ட கர்மாவாகும்.
௨, பிராரப்த கர்மம், இது இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களாகும்.
௩, ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்ப்படும் விளைவுகள் அடுத்தடுத்த பிறப்புகளில் அனுபவிப்பதற்கான ஆகாமிய கர்மாவாக உருவாகிறது.

மூன்று : சமண தத்துவம்.


சமண தத்துவம் சில வகையான அடிப்படை கொள்கைகளை கொண்டிருக்கிறது.
1, ஆத்மா
2, ஆத்ம சடப்பொருள்.
3, ஆத்மாவில் கர்மா புகுதல்.
4, கர்மா புகுவதை நிறுத்துதல்.
5, தவம் மற்றும் தியானம் மூலம் கர்மாவை விளக்குதல்.
6, பேரறிவைப்பெற்று விடுதலையடைதல்.
நான்கு வகையான நிலைகளில் ஆன்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
1, நரகத்தில் உள்ளவை,
2, தாவர இனங்கள் மற்றும் விலங்குகள்.
3, நன்மை தீமையை வேறு படுத்தி அறியும் ஆற்றல் பெற்ற மனிதர்கள்.
4, நற்செயலால் தேவர்களாகி அதன் பயனை அனுபவிப்பவர்கள். ( பிறகு அது தீர்ந்த பிறகு பூமிக்கு மனிதர்களாக திரும்புதல்)
அறிவை பெறுவதற்கு ஐந்து வாயில்களை விளக்குகிறது.
1, மதி ஞானம்.
2, சுருதி ஞானம்.
3, அவதி ஞானம்.
4, மன பார்யாய ஞானம்.
5, கேவல ஞானம். ( இதில் கேவல ஞானம் உண்மையை அறியும் வாய்ப்பை அளிக்கிறது.)

குறிப்பு 1 : கர்ம விதி துல்லியமாக இயங்குவதை பிரபஞ்ச நியதி கொண்டுள்ளது என்று சமணம் கூறுகிறது.

குறிப்பு 2 : சமண சமயம் பிரபஞ்ச படைப்பை இறைவன் என்ற சொல் மூலம் விளக்கவில்லை. மாறாக, கண்ணுக்கு புலனாகாத நுட்பமான சாரம் ஒன்று பிரபஞ்சம் முழுவதும் பரவி நிர்வகிக்கிறது என்று விளக்கப்படுகிறது.

குறிப்பு 3 : ஜீவன் முக்தர்கள் தூல உடலில் நீடித்து உலகியல் வாழ்க்கையில் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கர்மங்கள் மீண்டும் அவர்கள் அறியாமலேயே சேர வாய்ப்புண்டு.

இரண்டு : வர்த்தமான மகாவீரர் (கி.மு 599-529 )


மகாவீரர் வெளிப்படுத்தியது: இருவகை ஆன்மாக்கள் உலகில் உண்டு. 1, விடுதலையான ஆன்மாக்கள், பூமி, நீர், தீ, காற்று, செடிகொடி, ஆகியவை அசையாத இனத்தை சார்ந்த தொரு உணர்வை மட்டும் பெற்ற ஆன்மாக்கள். 2, அசையும் திறன் கொண்ட, புலன் உணர்வுகளை கொண்ட புழு, எறும்பு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதர்கள் இவைகள் இரண்டாவது வகையாகும்.
முன் பிறப்புகளில் ஏற்ப்பட்ட கர்மாவின் விளைவாகவே ஓர் ஆன்மாவுக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது.
ஓர் ஆன்மாவுக்கு எல்லையில்லாத உணர்வு, எல்லையற்ற அறிவு, ஆற்றல், ஆனந்தம் ஆகியவைகள் உண்டு. ஆனால் கர்மா இவற்றை கட்டுப்படுத்துகிறது. கர்மாவைப்பொறுத்து ஆன்மா சில வண்ணங்களை பெறுகிறது. இது விருப்பு, வெறுப்பு,அன்பு, கோபம்,ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. பழைய கர்மாவை முழுவதும் அழித்து,புதிய கர்மாவை உண்டாக்கிகொள்ளாத நிலையில் ஆன்மா விடுதலை பெறும்.ஆனால் இந்நிலையை அடைய பல பிறப்புகள் எடுக்க வேண்டும்.
கர்ம விடுதலை பெறும் ஆன்மாவின் பயணம் பதினான்கு நிலைகளில் விளக்கப்பட்டு உள்ளது. ( இதை புரிந்து கொள்ள சரியான பார்வை, சரியான அறிவு, சரியான நடத்தை அறிவுறுத்தப்படுகிறது)
1, ஆன்மா முழு கர்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சரி, தவறு பற்றி அறிய முடியாமல், அவதியுற்று உலகின் நிகழ்சிகளால் அதிருப்தி அடைகிறது. 2, சில பிறவிகளை எடுத்து சில அறிவீனங்களை விலக்கிக்கொள்கிறது. 3, அறிவுக்கும், ஐயத்திற்கும் இடையே ஊசலாடுகிறது. 4, ஐயத்தை நீக்கிககொள்கிறது. ஆனால், கர்மாவின் பிடியிலிருந்து முழுவதும் விலக முடிவதில்லை. அதே சமயம், ஐந்து நல்ல பண்புகளை ஆன்மா பெறுகிறது. 5, சரியான நடத்தையின் அவசியத்தை உணர்ந்து, பன்னிரண்டு உறுதிகளை எடுத்துக்கொள்வதால் கர்மாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் வாய்க்கிறது. ( இறை வணக்கம், குரு சேவை, வேதம் ஓதுதல், புலனடக்கம், தவம், தருமம் செய்தல் , இவைகளை நித்தம் தொடர்ந்து சாதகன்செய்து வருகிறான்.)6, சில வேட்கைகள் அழிக்கப்படுகின்றன.
7, இப்போது கோபம் அழிக்கப்படுகிறது. 8, நடத்தை தூய்மையாகி, உறுதிகள் கடை பிடிக்கப்பட்டு இதயம் இன்பமடைகிறது. 9, கர்வம் வெற்றி கொள்ளப்பட்டு, ஆண், பெண், என்ற பால் வேறுபாடு அகன்று, முழு நேர தியானத்தில் ஈடுபடுகிறான். 10, எல்லாவித புலன் இன்ப நாட்டங்களும், விலகுகின்றன. உலகியல் இலட்சியங்களும், இன்ப, துன்பங்களும் இந்நிலையில் கடந்து விடுகின்றன. 11, பேராசையை கடந்து அடுத்த நிலைக்கு செல்கிறான். 12, எந்த வித ஆசையோ, உலகியல் பாதிப்போ ஏற்ப்படுவதில்லை. 13, ஞானத்தை பெற்று எல்லையற்ற ஆனந்தத்தை பெறுகிறான். இந்நிலை ஜீவன் முக்தி என்று அழைக்கப்படுகிறது. 14, முழு கர்மாவும் அழிந்து முக்தி அடைகிறான்.

குறிப்பு : இறைநிலை பற்றிய கோட்பாட்டை விளக்குவதில் அர்த்தம் இல்லை என்று மகாவீரர் கருதினார்.
மனிதர்களுக்கு தேவையானது துன்பங்களிலிருந்து, கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதாகும். எல்லா ஜீவன்களுக்கும் இதுவே இறுதி நோக்கமாகும். ஆகவே அதற்க்குண்டான மார்க்கத்தை கண்டறிந்து செயல்படுவது அவசியம். அதை விட்டு, இறைவனைப்பற்றிய பிரதாபங்கள் அவசியமற்றது. அதில் உண்மையும் இல்லை. என்று மகாவீரர் அறிந்துள்ளார்.

ஒன்று : அறிமுகம்

1, உலகிற்கு அடிப்படையாகவும் அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, ஒடுக்கி, மீண்டும் வெளிப்படுத்தும் அந்த கருணாகார பேரறிவு, மனிதன் தன் பூரணத்துவத்தை அடைய, அனைத்து வகையிலும் தடையாக உள்ள இந்த 'தன்முனைப்பை' ஏன் மனிதனுக்கு வழங்கியது?
2,மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்துயிருக்குமே( தாவர உயிரி முதல் மனிதன் ஈறாக) தன்முனைப்பை வழங்கியுள்ளது தெரிகிறது.ஒரு உயிர் தன் பூரணத்துவத்தை அடைய தடையாக உள்ள இந்த தன்முனைப்பை , அந்த முற்றும், முழுமையான,பரிபூர்ண பேரறிவு ஏன் சகல உயிர்களுக்கும் இதை வழங்கியுள்ளது?
இந்த கேள்வி ஆன்மீக உணர்வுடைய அனைவருக்குமே தோன்றுகிறது.
இந்த தன்முனைப்பு வேர் விட்டு வளர்ந்திருப்பது அந்தந்த உயிரின் கர்மாவில். கர்மாவிலிருந்தே தன்முனைப்பு எழுகிறது. இந்த தன்முனைப்பே தலைமுறை, தலைமுறையாக ('தொடர்ந்து உயிர் வாழ்தல்' எனும் தன் முனைப்பின் தொழிலை நடத்தி ,
தான் வாழவேண்டும் என்ற ஆர்வம் முயற்சியுடன் இருக்கிறது. சுற்றுப்புறத்தை கவனத்துடன் ஆராய்ந்து உணவு தேடுகிறது. வேண்டாததை விலக்குகிறது. சூழ்நிலைக்கேற்ப தக அமைத்து கொள்ளுவதற்கு ஏற்ற இணக்கமும், பாரம்பரிய குணங்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஒழுங்கும்,
)சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப தன் இனம் தொடர, தனது தகவமைப்பையும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது கண்கூடு. இந்த செயல்பாட்டை அனைத்து உயிரினங்களிலும் நாம் காண்கிறோம். ---ஒரு உயிரினம் தொடந்து அதன் உச்சநிலை பரிணாமத்தை நோக்கி வலிமையோடு
உயிர்ப்புடன் தொடர வேண்டி அந்த உயிரினத்துக்கு தன்முனைப்பை வழங்கியுள்ளது அந்த பேரறிவு.---( இதன் விளைவாகவே உயிரினத்தில் உற்பத்தி ஆகிறது கர்மா)தன்முனைப்பே கர்மா, கர்மாவே தன்முனைப்பு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம்போல!
உயிரினம் தொடர்ந்து வளர்ச்சி படியில் பரிணாமமுற்று மனித உயிராக உயர்நிலை அடைகிறது. மனிதன் தொடர்ந்து தன் இனம் உயிர்வாழ அனைத்து தகவமைப்பிலும் தன்னிறைவு அடைந்த பின் தனது தன்முனைப்பை படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து, அது வேர்விட்டு ( சல்லி வேர்கள் ஏராளம்,ஏராளம்.) செழித்து வளர்ந்துள்ள இந்த கர்மாவை திரும்பி பார்த்து ..................-