Tuesday, May 4, 2010

நான்கு : பகவத் கீதை.


பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் காரணம், விளைவு என்ற அடிப்படையில் விளக்கப்படுகின்றன. எல்லா நிகழ்வுகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. கர்மா என்பது செயலுக்கு தூண்டுதலாக அமைகிறது.அதுவே சுமையாகவும் அமைகிறது. ஆகவே சுமையை குறைக்க விரும்புபவர்கள் மேற்கொண்டு கர்மாவை ஏற்ப்படுதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயல்களின் விளைவுகள் அடுத்தக் சுற்று கர்மாவாக சேர்ந்து விடுகின்றன.
செயல்களின் விளைவுகள் கர்மாவாக செயல்பட முடியாதவாறு அமைய வேண்டுமென்றால், பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மன நிலையுடன் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் செயலில் ஈடுபட வேண்டும். செயல்களின் பயன்களை துறந்து விடுதல் தியாகம்; பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களையே துறந்து விடுதல் சந்நியாசம் என்று விளக்கப்பட்டு, கர்மத்தளையிளிருந்து விடுபடும் மார்க்கத்தை பகவத் கீதை அறிவுறுத்துகிறது. கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
௧, சஞ்சித கர்மம், ஒட்டு மொத்தமாக முற்பிறப்பில் ஏற்ப்பட்ட கர்மாவாகும்.
௨, பிராரப்த கர்மம், இது இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களாகும்.
௩, ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்ப்படும் விளைவுகள் அடுத்தடுத்த பிறப்புகளில் அனுபவிப்பதற்கான ஆகாமிய கர்மாவாக உருவாகிறது.

2 comments:

  1. போலி சாமியார்கள் – கோரக்கர்
    துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து
    http://www.tamilkadal.com/?p=1144

    ReplyDelete
  2. Casino Guru - December 2021 - JT Hub
    JT Hub is a casino 안성 출장샵 platform with 경상남도 출장안마 a 구미 출장샵 large number 파주 출장샵 of slots, video poker games, and live dealer games. With over 1000 정읍 출장샵 games, including Slots,

    ReplyDelete