Tuesday, May 4, 2010

இரண்டு : வர்த்தமான மகாவீரர் (கி.மு 599-529 )


மகாவீரர் வெளிப்படுத்தியது: இருவகை ஆன்மாக்கள் உலகில் உண்டு. 1, விடுதலையான ஆன்மாக்கள், பூமி, நீர், தீ, காற்று, செடிகொடி, ஆகியவை அசையாத இனத்தை சார்ந்த தொரு உணர்வை மட்டும் பெற்ற ஆன்மாக்கள். 2, அசையும் திறன் கொண்ட, புலன் உணர்வுகளை கொண்ட புழு, எறும்பு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதர்கள் இவைகள் இரண்டாவது வகையாகும்.
முன் பிறப்புகளில் ஏற்ப்பட்ட கர்மாவின் விளைவாகவே ஓர் ஆன்மாவுக்கு இன்பமோ, துன்பமோ உண்டாகிறது.
ஓர் ஆன்மாவுக்கு எல்லையில்லாத உணர்வு, எல்லையற்ற அறிவு, ஆற்றல், ஆனந்தம் ஆகியவைகள் உண்டு. ஆனால் கர்மா இவற்றை கட்டுப்படுத்துகிறது. கர்மாவைப்பொறுத்து ஆன்மா சில வண்ணங்களை பெறுகிறது. இது விருப்பு, வெறுப்பு,அன்பு, கோபம்,ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. பழைய கர்மாவை முழுவதும் அழித்து,புதிய கர்மாவை உண்டாக்கிகொள்ளாத நிலையில் ஆன்மா விடுதலை பெறும்.ஆனால் இந்நிலையை அடைய பல பிறப்புகள் எடுக்க வேண்டும்.
கர்ம விடுதலை பெறும் ஆன்மாவின் பயணம் பதினான்கு நிலைகளில் விளக்கப்பட்டு உள்ளது. ( இதை புரிந்து கொள்ள சரியான பார்வை, சரியான அறிவு, சரியான நடத்தை அறிவுறுத்தப்படுகிறது)
1, ஆன்மா முழு கர்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சரி, தவறு பற்றி அறிய முடியாமல், அவதியுற்று உலகின் நிகழ்சிகளால் அதிருப்தி அடைகிறது. 2, சில பிறவிகளை எடுத்து சில அறிவீனங்களை விலக்கிக்கொள்கிறது. 3, அறிவுக்கும், ஐயத்திற்கும் இடையே ஊசலாடுகிறது. 4, ஐயத்தை நீக்கிககொள்கிறது. ஆனால், கர்மாவின் பிடியிலிருந்து முழுவதும் விலக முடிவதில்லை. அதே சமயம், ஐந்து நல்ல பண்புகளை ஆன்மா பெறுகிறது. 5, சரியான நடத்தையின் அவசியத்தை உணர்ந்து, பன்னிரண்டு உறுதிகளை எடுத்துக்கொள்வதால் கர்மாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் வாய்க்கிறது. ( இறை வணக்கம், குரு சேவை, வேதம் ஓதுதல், புலனடக்கம், தவம், தருமம் செய்தல் , இவைகளை நித்தம் தொடர்ந்து சாதகன்செய்து வருகிறான்.)6, சில வேட்கைகள் அழிக்கப்படுகின்றன.
7, இப்போது கோபம் அழிக்கப்படுகிறது. 8, நடத்தை தூய்மையாகி, உறுதிகள் கடை பிடிக்கப்பட்டு இதயம் இன்பமடைகிறது. 9, கர்வம் வெற்றி கொள்ளப்பட்டு, ஆண், பெண், என்ற பால் வேறுபாடு அகன்று, முழு நேர தியானத்தில் ஈடுபடுகிறான். 10, எல்லாவித புலன் இன்ப நாட்டங்களும், விலகுகின்றன. உலகியல் இலட்சியங்களும், இன்ப, துன்பங்களும் இந்நிலையில் கடந்து விடுகின்றன. 11, பேராசையை கடந்து அடுத்த நிலைக்கு செல்கிறான். 12, எந்த வித ஆசையோ, உலகியல் பாதிப்போ ஏற்ப்படுவதில்லை. 13, ஞானத்தை பெற்று எல்லையற்ற ஆனந்தத்தை பெறுகிறான். இந்நிலை ஜீவன் முக்தி என்று அழைக்கப்படுகிறது. 14, முழு கர்மாவும் அழிந்து முக்தி அடைகிறான்.

குறிப்பு : இறைநிலை பற்றிய கோட்பாட்டை விளக்குவதில் அர்த்தம் இல்லை என்று மகாவீரர் கருதினார்.
மனிதர்களுக்கு தேவையானது துன்பங்களிலிருந்து, கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதாகும். எல்லா ஜீவன்களுக்கும் இதுவே இறுதி நோக்கமாகும். ஆகவே அதற்க்குண்டான மார்க்கத்தை கண்டறிந்து செயல்படுவது அவசியம். அதை விட்டு, இறைவனைப்பற்றிய பிரதாபங்கள் அவசியமற்றது. அதில் உண்மையும் இல்லை. என்று மகாவீரர் அறிந்துள்ளார்.

No comments:

Post a Comment